சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஜல் ஜீவன்' திட்டத்தில் பலே முறைகேடு

Updated : நவ 21, 2020 | Added : நவ 19, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
காஞ்சிபுரம் : மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' திட்டத்தில், காஞ்சி புரம் மாவட்டத்தில், இல்லாத கிராமத்திற்கு குடிநீர் குழாய் பதிக்க, மதிப்பீடு செய்து நிதி முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க, மத்திய அரசு, 'ஜல் ஜீவன்' திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இத்திட்டத்திற்கு, மாவட்டம் வாரியாக, மத்திய அரசு பல நுாறு
இல்லாத கிராமத்திற்கு குடிநீர் குழாய் 'ஜல் ஜீவன்' திட்டத்தில் பலே முறைகேடு

காஞ்சிபுரம் : மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' திட்டத்தில், காஞ்சி புரம் மாவட்டத்தில், இல்லாத கிராமத்திற்கு குடிநீர் குழாய் பதிக்க, மதிப்பீடு செய்து நிதி முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க, மத்திய அரசு, 'ஜல் ஜீவன்' திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இத்திட்டத்திற்கு, மாவட்டம் வாரியாக, மத்திய அரசு பல நுாறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 185 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


87 ஆயிரம் ரூபாய்


காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், குன்றத்துார் என, ஐந்து ஒன்றியங்கள் உள்ளன.இந்த ஒன்றியங்களில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்களில், இந்த திட்டம் செயல்படுத்த துவக்கப்பட்டுள்ளது.
இதில், வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் ஊராட்சியில், பெண்டை என்ற கிராமம் உள்ளது.இந்த கிராமத்திற்கு, காலனி பகுதி கிடையாது. ஆனால், பெண்டை கிராமத்தில் காலனி இருப்பதாக கணக்கு காட்டி, 87 ஆயிரம் ரூபாயில், குடிநீர் குழாய் பதிக்க மதிப்பீடு செய்யப்பட்டு, முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது

ஊராட்சிகளில், குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளில், ஜல் ஜீவன் திட்டத்தின் வாயிலாக, குழாய் பதித்து குடிநீர் வழங்க வேண்டும்.ஆனால், ஏற்கனவே பிற திட்டத்தில் முறைகேடாக இணைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்களை, ஜல் ஜீவன் திட்டத்தில், குழாய் இணைப்பு கொடுத்தது போல கணக்கு காண்பித்து வருகின்றனர்.
அதேபோல், இல்லாத கிராமங்களுக்கும் நிதி ஒதுக்கி, முறைகேடு செய்து வருகின்றனர்.

வாலாஜாபாத் ஒன்றியம்,வில்லிவலம் ஊராட்சியில் இல்லாத பெண்டை கிராம காலனியை கணக்கு காட்டி, நிதி ஒதுக்கிஉள்ளனர்.இதுபோல, பல ஊராட்சிகளில் இல்லாத கிராமங்களை கணக்கு காட்டி, குடிநீர் குழாய் பதித்து, நிதி முறைகேடு நடந்துள்ளது.


பல கோடி ரூபாய்



இந்த திட்டத்தில், அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், 7 முதல், 12 சதவீதம் வரை கமிஷனாக, ஒப்பந்ததாரர்களிடம் அரசியல்வாதிகள் கேட்பதாகவும்; புகார் எழுந்துள்ளது.பிரதம மந்திரி கிசான் முறைகேடு போல, இந்த திட்டத்திலும், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்து வருகிறது. இதை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து விளக்கம் கேட்க, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் செயற்பொறியாளர் கவிதா ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Karthikeyan - Chennai,இந்தியா
20-நவ-202008:41:29 IST Report Abuse
P Karthikeyan தமிழகம் என்றாலே ஊழல் தான் ..தமிழன்(க) அரசியலே என்றாலே ஊழலின் ஊற்று நாற்று . மோடி நல்லது செய்ய நினைத்தாலும் இவர்கள் ஊழல் செய்து விட்டு அவரை go back என்று வெக்கமே இல்லாமல் கருப்பு பலூன் பறக்கவிடும் துரோகிகள் .
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
20-நவ-202008:31:40 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஆப்பு இவர்கள் மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் ஊழல் செய்வார்கள். அதற்கு அம்பானியே பரவாயில்லை. எதாவது செய்வார்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-நவ-202007:55:51 IST Report Abuse
Lion Drsekar இது போன்ற செயல்பாடுகள் இல்லாத இடம் ஏதாவது ஒன்று ? இது போன்ற செயல்பாடுகளை கண்டும் காணாமல் போதுதான் நாகரீகம், வாழ்க ஜனநாயகம் வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X