பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு சிறப்பு கற்கள் கிடைப்பதில் சிக்கல்

Updated : நவ 19, 2020 | Added : நவ 19, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி, :அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்துக்காக, ராஜஸ்தானில் தடை செய்யப்பட்ட, 'பிங்க்' நிற மணல் கற்களுக்கான சுரங்கத்தை திறக்க, அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நடவடிக்கை இம்மாநிலத்தின் பரத்பூரில், பண்ட் பரேத்தா வனவிலங்கு சரணாயலம் உள்ளது. இங்கு, பன்சி பாஹர்புர் என்கிற
 ராமர் கோவில் கட்டுமானத்திற்கு சிறப்பு கற்கள் கிடைப்பதில் சிக்கல்

புதுடில்லி, :அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்துக்காக, ராஜஸ்தானில் தடை செய்யப்பட்ட, 'பிங்க்' நிற மணல் கற்களுக்கான சுரங்கத்தை திறக்க, அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.


நடவடிக்கை


இம்மாநிலத்தின் பரத்பூரில், பண்ட் பரேத்தா வனவிலங்கு சரணாயலம் உள்ளது. இங்கு, பன்சி பாஹர்புர் என்கிற அரிய வகை, பிங்க் நிற மணல் கற்கள் கிடைக்கின்றன.இதற்கு நாடு முழுவதும் அதிக மவுசு உள்ளது. வனப்பகுதிக்குள், இந்த மணல் கற்களுக்கான சுரங்கம் அமைந்திருப்பதால், இந்த சுரங்கங்களுக்கு, 2016ல் தடை விதிக்கப்பட்டது.


latest tamil news




இதையடுத்து, சட்டரீதியாக இயங்கி வந்த பிங்க் மணல் கற்கள் சுரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிக்காக, பாஹர்புர் மணல் கற்களை, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், 1989ல் வாங்கினர்.அந்த கற்களை வைத்து, கோவிலுக்குத் தேவையான, 40 சதவீத சிற்ப வேலைப்பாடுகள் முடிந்துள்ளன. இந்நிலையில், மேற்கொண்டு மணல் கற்களை எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவில் கட்டுமான பணிக்கு, மேலும் கற்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து, வி.எச்.பி., செய்தி தொடர்பாளர் சரத் சர்மா கூறியதாவது:ராமர் கோவில் கட்டுமானம், ஒரு தேசியப் பணி, இதை ராஜஸ்தான் அரசு புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து விதமான தடை உத்தரவுகளுக்கும், மாற்று தீர்வு உள்ளது. எனவே, பன்சி பாஹர்புர் மணல் கல் சுரங்கங்களை மீண்டும் திறக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்தால், அதை வரவேற்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.


ஆய்வு



இதையடுத்து, வனப்பகுதிக்குள் உள்ள, மணல்கல் சுரங்கத்தை மீண்டும் திறக்க விண்ணப்பிக்கும்படி, மாநில சுரங்கத்துறை இயக்குனருக்கு, அத்
துறையின் செயலர் கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து, வருவாய், சுரங்கம் மற்றும் வனத்துறை அதிகாரிகள், வனப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். ''மணற்கற்கள் விவகாரம், இதுவரை தங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை,'' என, ராமர் கோவில் கட்டுமான கமிட்டியின் தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா தெரிவித்தார்.-------------------------------

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
20-நவ-202007:59:08 IST Report Abuse
 Muruga Vel அயோத்தியில் கோவில் கட்டுவதால் அந்த பகுதியில் பொருளாதாரம் முன்னேறும் ..கோவிலை பற்றி குறை சொல்பவர்கள் மசூதி சர்ச் குருதவாரா பற்றி சொல்ல மாட்டார்
Rate this:
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
20-நவ-202007:53:04 IST Report Abuse
Padmanaban Jayakrishnan நாடு முழுக்க AIMS மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி உள்ள கற்களை கொண்டே ராமர் கோவிலை கட்டி முடிக்க முடியும்.இங்கு கற்களுக்கா பஞ்சம் ?
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
20-நவ-202014:08:06 IST Report Abuse
Dr. Suriyaஅப்புறம் AIMS மருத்துவ மனை வரவில்லை என்று புலம்ப கூடாது...போராட கூடாது ... சம்மதமா?...
Rate this:
Cancel
20-நவ-202006:37:55 IST Report Abuse
ஆப்பு ஆத்மநிர்பரா கொள்கையை பின்பற்றி சீனாவுக்கு பிங்க் கற்கள் ஆர்டர் குடுத்துற வேண்டியதுதானே. நல்லா செஞ்சு குடுப்பாய்ங்க. மலுவாவும் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X