பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் மீட்பு பணிக்கு தயாராக அறிவுரை

Added : நவ 20, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய ஊராட்சி நிர்வாகங்கள், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்க, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பொள்ளாச்சியிலும் தொடர்ந்து மழை பெய்கிறது. மழை வெள்ளம், இடி, மின்னலால் பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்களை பாதுகாக்கவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்க

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய ஊராட்சி நிர்வாகங்கள், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்க, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பொள்ளாச்சியிலும் தொடர்ந்து மழை பெய்கிறது. மழை வெள்ளம், இடி, மின்னலால் பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்களை பாதுகாக்கவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என, தெற்கு ஒன்றிய ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 26 ஊராட்சிகளிலும், வெள்ளம் ஏற்பட்டால், பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்குவதற்கு பள்ளி கட்டடங்கள், சமூக கூடங்களை தயாராக வைக்கவும், வெள்ளத்தை திசை மாற்ற மணல் மூட்டைகள், மின்தடை ஏற்பட்டால் பயன்படுத்த 'ஜெனரேட்டர்', பொக்லைன் போன்ற கனரக இயந்திரங்களை தயாராக வைத்திருக்கவும், ஊராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.மேலும், அவசியம் ஏற்பட்டால், வருவாய் துறையுடன் இணைந்து, பேரிடர் மேலாண்மை பணியில் ஈடுபட ஒன்றிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X