பொது செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்த பணியாளர்கள் 'ஸ்டிரைக்': மின் பராமரிப்பு பணிகள் தேக்கம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில், ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, மின் கம்பங்களில் புதர் சூழ்ந்துள்ளது.கிணத்துக்கடவு, நெகமம், குருநெல்லிபாளையம், கோவில்பாளையம் துணை மின் நிலையங்களில், ஒப்பந்த பணியாளர்களால், மின் கம்பங்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யப்பட்டு வந்தது.மேலும், துணை மின் நிலையங்களில், 90 சதவீதம் கம்பியாளர் பணியிடம் காலியாக

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில், ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, மின் கம்பங்களில் புதர் சூழ்ந்துள்ளது.கிணத்துக்கடவு, நெகமம், குருநெல்லிபாளையம், கோவில்பாளையம் துணை மின் நிலையங்களில், ஒப்பந்த பணியாளர்களால், மின் கம்பங்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யப்பட்டு வந்தது.மேலும், துணை மின் நிலையங்களில், 90 சதவீதம் கம்பியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியில் இருந்தவர்கள் பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டனர்.புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. பதவி உயர்வு பெற்று சென்ற பணியாளர்கள் கூடுதல் பணியாக செய்து வந்தனர்.இதற்காக, ஒப்பந்த பணியாளர்களை வைத்து பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். இதனால், பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் பாதித்துள்ளது.கடந்த மாதம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்யவில்லை. இதனால், மின் கம்பங்களில் புதர்கள் சூழ்ந்து வருகிறது. மின் கம்பங்களில் சூழ்ந்துள்ள புதர்களை அகற்ற, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X