பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் குட்டையான ரோடுகள்

Added : நவ 20, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நகராட்சி பகுதியில், இத்திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.திட்டத்தில், வீட்டு இணைப்பு குழாய் பதிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல லாயக்கற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நகராட்சி பகுதியில், இத்திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.திட்டத்தில், வீட்டு இணைப்பு குழாய் பதிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல லாயக்கற்ற ரோடுகளாக மாறியுள்ளதால், வாகன ஓட்டுனர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர்.டி.கோட்டாம்பட்டி - பணிக்கம்பட்டி செல்லும் ரோடு, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டது. அதன் பின் சீரமைக்கவில்லை. ரோடுகள் குண்டும், குழியுமாக உருமாறியுள்ளதால், விபத்துகள் ஏற்படுகிறது.மேலும், ரோடு திரும்பும் பகுதியில், குழியாக உள்ள இடத்தில் மழைநீர் குட்டை போல தேங்கி நிற்கிறது. இதனால், வாகனங்களில் வருவோர் விபத்துக்குள்ளாகின்றனர்.ரோட்டை புதுப்பிக்கும் பணிகள் காலதாமதமாவதால், தற்காலிகமாக சீரமைக்க அதிகாரிகள் மனது வைத்து, விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X