பொது செய்தி

தமிழ்நாடு

'டிஜிட்டல்' பரிவர்த்தனை: உரக்கடைகளில் அறிவுரை

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஆனைமலை:கோவை மாவட்டம் முழுவதிலும், உரக்கடைக்காரர்கள் 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனை செய்ய, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில், 122 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 145 தனியார் உரக்கடைகள் மூலம், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விவசாயிகள் 'டிஜிட்டல்' பரிவர்த்தனை செய்து,

ஆனைமலை:கோவை மாவட்டம் முழுவதிலும், உரக்கடைக்காரர்கள் 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனை செய்ய, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில், 122 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 145 தனியார் உரக்கடைகள் மூலம், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விவசாயிகள் 'டிஜிட்டல்' பரிவர்த்தனை செய்து, உரம், விதைகள் வாங்குவதற்காக, தனியார் உரக்கடைகளில் வேளாண் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.கோவை வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி கூறியதாவது:'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், 'ஆன்லைன்' பண பரிவர்த்தனை மிகவும் எளிமைபடுத்தப்பட்டு உள்ளது. மக்கள் மிக எளிமையாக, கடைகளில் ஒட்டியுள்ள, 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி, 'ஆன்லைன்' வாயிலாக பண பரிவர்த்தனை செய்கின்றனர். இதேபோல், உரக்கடைகளிலும் 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனை செய்ய, இந்திய உர அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டம் முழுவதிலும், உரக்கடைகளில் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.உரிமையாளர்கள் வங்கிகளில், அல்லது, 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு உதவும் நிறுவனங்களில் பதிவு செய்து, கடைகளில் 'கியூ ஆர் கோடு' ஒட்ட வேண்டும். விவசாயிகள் முடிந்த வரை 'ஆன்லைன்' பரிவர்த்தனை செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X