பொது செய்தி

தமிழ்நாடு

வரைவு வாக்காளர் பட்டியல்: மக்கள் பார்வைக்கு வைப்பு

Added : நவ 20, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் சட்டசபை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல், தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் தொகுதியின் வரைவு வாக்காளர் பட்டியல் வருவாய்த்துறை அதிகாரிகள் வாயிலாக

மடத்துக்குளம்:மடத்துக்குளம் சட்டசபை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல், தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் தொகுதியின் வரைவு வாக்காளர் பட்டியல் வருவாய்த்துறை அதிகாரிகள் வாயிலாக வெளியிடப்பட்டது.மடத்துக்குளம் தொகுதியில், 117 ஓட்டுச்சாவடி மையங்களும், 287 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன. வாக்காளர்களில், 1,20,335 ஆண்கள், 1,24,068 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 15 என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 418 பேர் உள்ளனர். இவர்களின் பெயர் உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைதொடர்ந்து, இந்த பட்டியலை பாகம் வாரியாக பிரித்து, தாலுகா அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனைப் பார்வையிட்ட பொதுமக்கள் மற்றும் கட்சியை சார்ந்தவர்கள், சந்தேகங்களை வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X