பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணை: ஒரு வாரத்தில் 7 அடி உயர்வு

Added : நவ 20, 2020
Share
Advertisement
உடுமலை:பருவ மழை காரணமாக, அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, ஒரு வாரத்தில், 7 அடி உயர்ந்துள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.நடப்பு ஆண்டு, தென் மேற்கு பருவ மழை காரணமாக, மூன்று முறை அணை நிரம்பிய நிலையில், செப்.,20ல், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தண்ணீர்
 அமராவதி அணை: ஒரு வாரத்தில் 7 அடி உயர்வு

உடுமலை:பருவ மழை காரணமாக, அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, ஒரு வாரத்தில், 7 அடி உயர்ந்துள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.நடப்பு ஆண்டு, தென் மேற்கு பருவ மழை காரணமாக, மூன்று முறை அணை நிரம்பிய நிலையில், செப்.,20ல், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், அணை நீர் மட்டம் வேகமாக சரிந்தது.இந்நிலையில், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அதே போல், அமராவதி பாசனப்பகுதிகளிலும், கன மழை பெய்ததால், பாசனத்திற்கு நீர் திறப்பும் நிறுத்தப்பட்டதால், அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.கடந்த, 13ம் தேதி, அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 64.67 அடி நீர் மட்டம் இருந்தது. கன மழை காரணமாக, ஒரு வாரத்தில், 7.09 அடி நீர் மட்டம் உயர்ந்து, நேற்று காலை, 71.76 அடியாக காணப்பட்டது. நீர் இருப்பு மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 2,526.07 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு, 1,729 கன அடியாகவும் இருந்தது. அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், ஆயக்கட்டு பகுதியில், கரும்பு, நெல், தென்னை, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'நீர் இருப்பு மற்றும் வரத்து அடிப்படையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வட கிழக்கு பருவ மழை காரணமாக, மீண்டும் அணை முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது. நடப்பு ஆண்டு சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் வழங்க முடியும்', என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X