பொது செய்தி

தமிழ்நாடு

கோழி வளர்ப்பு தொகை உயர்த்த நிறுவனங்களிடம் வலியுறுத்தல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:'கறிக்கோழி வளர்ப்பு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஒப்பந்த பண்ணை விவசாயிகள் கறிக்கோழி நிறுவனத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் கறிக்கோழி வளர்த்து நிறுவனங்களுக்கு தருகின்றனர்.பொள்ளாச்சியில் செயல்படும் கறிக்கோழி நிறுவன அலுவலகங்களில், கோரிக்கையை வலியுறுத்தி மனு
 கோழி வளர்ப்பு தொகை உயர்த்த நிறுவனங்களிடம் வலியுறுத்தல்

பொள்ளாச்சி:'கறிக்கோழி வளர்ப்பு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஒப்பந்த பண்ணை விவசாயிகள் கறிக்கோழி நிறுவனத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் கறிக்கோழி வளர்த்து நிறுவனங்களுக்கு தருகின்றனர்.பொள்ளாச்சியில் செயல்படும் கறிக்கோழி நிறுவன அலுவலகங்களில், கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.விவசாயிகள், கறிக்கோழி பண்ணையாளர்கள் சங்க பொள்ளாச்சி தலைவர் ராஜசேகர் மற்றும் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தனர். அவர்கள் கூறியதாவது:கறிக்கோழி வளர்ப்புக்கு, கிலோவுக்கு, 6 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை, 12 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, கறிக்கோழி நிறுவனங்கள் மற்றும் பிராய்லர் கோ-ஆர்டினேஷன் கமிட்டியிடம் வலியுறுத்தியுள்ளோம்.கறிக்கோழி வளர்ப்பில், ஒப்பந்த பண்ணையாளர்களுக்கு உரிய வளர்ப்பு தொகை அளிக்கப்படுவதில்லை. தற்போதுள்ள விலைவாசி உயர்வை நிறுவனங்கள் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, சங்கத்தின் மாநில தலைமையின் முடிவின்படி, தமிழகம் முழுக்க வளர்ப்பு தொகையை உயர்த்தும் வரை, கோழிக்குஞ்சுகளை பண்ணையில் இறக்க வேண்டாம் என நிறுவனங்களை முறைப்படி வலியுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பொள்ளாச்சி சப்-கலெக்டருக்கும் இது தொடர்பான கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X