தக்காளி விலை சரிவு :மழையால் 'சோதனை'

Added : நவ 20, 2020
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாலும், மழையால் தக்காளி பழுக்காமல் இருந்ததாலும், தக்காளி விலை சரிந்தது.கிணத்துக்கடவு பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் நடந்த ஏலத்தில், 14 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டி ஒன்று, அதிகபட்சமாக, 350 ரூபாய்க்கு ஏலம் சென்றது.நேற்று

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாலும், மழையால் தக்காளி பழுக்காமல் இருந்ததாலும், தக்காளி விலை சரிந்தது.கிணத்துக்கடவு பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் நடந்த ஏலத்தில், 14 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டி ஒன்று, அதிகபட்சமாக, 350 ரூபாய்க்கு ஏலம் சென்றது.நேற்று நடந்த ஏலத்தில், தக்காளி பெட்டி ஒன்று அதிகபட்சமாக, 280 ரூபாய்க்கு ஏலம் சென்றது. பிற மாவட்டங்களில் மழை பொழிவு அதிகமாக இருந்ததால், வெளியூர் மாவட்ட வியாபாரிகள் தினசரி மார்க்கெட்டிற்கு வரவில்லை.மேலும், இங்கு பெய்த மழையால் தக்காளி செடிகளில் பழுக்காமல் காயாக இருந்தது. இதனை விவசாயிகள் பறித்து வந்ததால், தக்காளி வரத்து அதிகரித்ததாலும், பெட்டி ஒன்றுக்கு 70 ரூபாய் விலை சரிந்துள்ளது. ஏலம் எடுக்கப்பட்ட தக்காளி சில்லரை மார்க்கெட்டில், கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய்க்கும், மளிகை கடைகளில் 28 ரூபாய்க்கும், சூப்பர் மார்க்கெட்டில், 32 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X