பொது செய்தி

தமிழ்நாடு

'லொள்' தொல்லை அதிகரிப்பு: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை 

Added : நவ 20, 2020
Share
Advertisement
உடுமலை;உடுமலை நகர பகுதிகளில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.உடுமலையில், பிரதான ரோடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிககளில், அதிகளவு தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. கூட்டம், கூட்டமாக சுற்றி வரும், அவை நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்களை கடித்து வருகிறது.மேலும், ரோடுகளில் சுற்றி வருவதால், விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள், குழந்தைகள்
 'லொள்' தொல்லை அதிகரிப்பு: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை 

உடுமலை;உடுமலை நகர பகுதிகளில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.உடுமலையில், பிரதான ரோடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிககளில், அதிகளவு தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. கூட்டம், கூட்டமாக சுற்றி வரும், அவை நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்களை கடித்து வருகிறது.மேலும், ரோடுகளில் சுற்றி வருவதால், விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள், குழந்தைகள் வெளியில் வருவதற்கு அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நகராட்சி மாட்டுத்தொழுவம் பகுதியில், நகராட்சி சார்பில், 2.60 லட்சம் ரூபாய் மதிப்பில், கருத்தடை மற்றும் வெறி நாய் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டது.மேலும், 10 லட்சம் ரூபாய் செலவில், நாய் பிடிக்கும் வாகனமும் வாங்கப்பட்டது. ஒரு சில மாதங்கள் செயல்பட்ட நிலையில், இத்திட்டம் முடங்கியது. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல், இதற்காக, அமைக்கப்பட்ட நாய்களுக்கான குடும்ப கட்டுப்பாடு மையம் சிதிலமடைந்தும், நாய் பிடிக்கும் வாகனம் வீணாகியும் வருகிறது.எனவே, உடுமலை நகரப்பகுதிகளில் சுற்றி வரும், நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,' தனியார் தொண்டு நிறுவனம் மூலம், நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால், முடங்கியுள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X