ஆக்கிரமிப்புகளால் குறுகிய நகரில் நிரந்தரமான போக்குவரத்து நெரிசல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
உடுமலை;உடுமலை நகரின் முக்கிய ரோட்டில், தற்காலிக ஆக்கிரமிப்பு மற்றும் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை இல்லாததால், போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாகிறது.உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும், நெடுஞ்சாலையுடன் இணையும் பை-பாஸ் ரோடு உள்ளது.பொள்ளாச்சி உட்பட

உடுமலை;உடுமலை நகரின் முக்கிய ரோட்டில், தற்காலிக ஆக்கிரமிப்பு மற்றும் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை இல்லாததால், போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாகிறது.உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும், நெடுஞ்சாலையுடன் இணையும் பை-பாஸ் ரோடு உள்ளது.பொள்ளாச்சி உட்பட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், இந்த ரோடு வழியாகவே, சென்று, பழநி ரோட்டில் இணைய முடியும். தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்களும் நகரின் அனைத்து பகுதிகளுக்கு செல்லவும், அனைத்து பஸ்களும், பஸ் ஸ்டாண்ட் செல்ல இந்த ஒரு ரோடு மட்டுமே உள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த ரோட்டில், நிரந்தர ஆக்கிரமிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது. ஆனால், இந்த ரோட்டில், வரிசையாக கடைகள் அமைந்துள்ளன. ரோட்டுக்கும், தங்களது கடைக்கும் இடையிலான இடத்தை கடைக்காரர்கள், பல்வேறு பொருட்களை வைத்து ஆக்கிரமித்து கொள்கின்றனர்.அங்கு வரும் வாகன ஓட்டிகளும் ரோட்டை ஒட்டியே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், போக்குவரத்து கிளை டெப்போ வரை வாகனங்கள் திணறியபடியே வரும் நிலை உள்ளது. இப்பகுதிக்கு பிறகு, பழநி ரோடு சந்திப்பு பகுதி வரை, பை-பாஸ் ரோடு பாதியளவு காணாமல், போய்விட்டது. இதனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் பஸ்கள், திரும்ப முடியாமல், திணற வேண்டியுள்ளது. குறுகலான இடத்தில், பஸ்கள் திரும்பும் போது, பிற வாகனங்கள் பை-பாஸ் ரோட்டில் வெகுதொலைவுக்கு அணி வகுத்து நிற்கின்றன.இதே போல், யு.கே.சி., நகருக்கு, ரோடு பிரியும் இடத்திலும், நெரிசலால் விபத்துகள் ஏற்படுகிறது.போக்குவரத்து மிகுந்த ரோட்டில் நிலவும் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இப்பிரச்னைக்கு தீர்வு காண தற்காலிக ஆக்கிரமிப்புகளை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து அகற்ற வேண்டும்; 'பார்க்கிங்' இடத்தை வரையறை செய்து, தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X