சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடு திருடியவர் கைது: தப்பியவருக்கு வலை

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை, காளியாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி பாலு, 47. இவரது தோப்பில் கட்டப்பட்டிருந்த ஆடு, நேற்று முன்தினம் காணாமல் போனது. இதையடுத்து, அவர் நேற்று காலை, பொள்ளாச்சி சந்தைக்கு சென்ற போது, அவரது ஆட்டை விற்பனை செய்வதற்காக இருவர் வந்துள்ளனனர். இவரை கண்டதும் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர்.அருகில் இருப்பவர்கள் உதவியுடன், தப்பியோடிய ஒருவரை பிடித்து

ஆனைமலை:ஆனைமலை, காளியாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி பாலு, 47. இவரது தோப்பில் கட்டப்பட்டிருந்த ஆடு, நேற்று முன்தினம் காணாமல் போனது. இதையடுத்து, அவர் நேற்று காலை, பொள்ளாச்சி சந்தைக்கு சென்ற போது, அவரது ஆட்டை விற்பனை செய்வதற்காக இருவர் வந்துள்ளனனர். இவரை கண்டதும் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர்.அருகில் இருப்பவர்கள் உதவியுடன், தப்பியோடிய ஒருவரை பிடித்து ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில் பாலு ஒப்படைத்தார். விசாரணையில், வேட்டைக்காரன்புதுார் அருகே தேவிபட்டணம் பகுதியை சேர்ந்த லிங்கமுத்து மகன் கார்த்தி, 22, என்பது தெரியவந்தது. மேலும், அவரது தம்பி கவுதம், 21, உடன் இணைந்து ஆடு திருடியது தெரியவந்துள்ளது. ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X