பொது செய்தி

தமிழ்நாடு

குளத்து நீரால் பாதிப்பு மக்கள் சாலை மறியல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
குனியமுத்தூர்:செங்குளத்து நீரால் வீடுகள் பாதிக்கப்படுவதை தடுக்க கோரி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்,குனியமுத்தூரிலிருந்து சுண்டக்காமுத்தூர் செல்லும் வழியில், வசந்தம் கார்டன், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில், 150க்கும். மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் இப்பகுதியிலுள்ள செங்குளம் நிரம்பியது. தொடர்ந்து நீர் வந்ததால், சிறுவாணி டேங்க் ரோடு, குட்டப்பன்

குனியமுத்தூர்:செங்குளத்து நீரால் வீடுகள் பாதிக்கப்படுவதை தடுக்க கோரி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்,குனியமுத்தூரிலிருந்து சுண்டக்காமுத்தூர் செல்லும் வழியில், வசந்தம் கார்டன், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில், 150க்கும். மேற்பட்ட வீடுகள் உள்ளன.

கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் இப்பகுதியிலுள்ள செங்குளம் நிரம்பியது. தொடர்ந்து நீர் வந்ததால், சிறுவாணி டேங்க் ரோடு, குட்டப்பன் கடை அருகே நீர் வெளியேறி மேற்குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள வீடுகளை சூழ்ந்தது. சாலையிலும் தேங்கியது.

பாதிக்கப்பட்டவர்களில், 50 பேர் நேற்று இரவு, 9:30 மணியளவில் வகாப் பெட்ரோல் பங்க் எதிரே, பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குனியமுத்தூர் போலீசார் மறியலை கைவிடச் செய்தனர். 10 நிமிடங்கள் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் மறியலில் ஈடுபட்டோர், ' செங்குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டும். மழை நீர் வடிகால்களை தூர் வாரி, நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரினர்.இதையடுத்து சாலையில் தேங்கிய நீர் செல்ல பொக்லைன் இயந்திர வாகனம் மூலம் குழி தோண்டப்பட்டு, குறிச்சி குளத்திற்கு நீர் செல்லும் கால்வாயுடன் இணைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X