பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ இட ஒதுக்கீட்டில் 15 மாணவர்கள் சேர்க்கை 

Added : நவ 20, 2020
Share
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவ, மாணவிகள் 15 பேர் கல்லுாரிகளில் சேர்ந்தனர்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மருத்துவபடிப்பில் அரசு பள்ளிகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து, உள் ஒதுக்கீடு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேற்றுமுன்தினம் துவங்கியது.

கோவை:கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவ, மாணவிகள் 15 பேர் கல்லுாரிகளில் சேர்ந்தனர்.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மருத்துவபடிப்பில் அரசு பள்ளிகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து, உள் ஒதுக்கீடு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேற்றுமுன்தினம் துவங்கியது. இதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 313 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 92 பி.டி.எஸ்.இடங்கள் என, மொத்தம் 405 இடங்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்கில் பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் சேர்ந்து வருகின்றனர். கோவை, அரசு மருத்துவ கல்லுாரியில் நடப்பாண்டில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களும், இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில் 100 இடங்களும் உள்ளன. இதில், இட ஒதுக்கீட்டில் சேர்க்கை ஆணை பெற்ற, கோவையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மற்றும் திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் என மொத்தம், 10 பேர் கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்ந்தனர். இவர்களில், எட்டு பேர் மாணவிகள். இதேபோல், இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கோவையை சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் சேர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X