சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானிய உரத்தில் சட்ட விரோதமாக பசை தயாரிப்பு: 42 டன் யூரியா பறிமுதல்; கம்பெனிக்கு 'சீல்'

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி அருகே, விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்ட உரத்தை பயன்படுத்தி, பசை தயாரித்த கம்பெனிக்கு வருவாய்த்துறையினர், 'சீல்' வைத்து, 42 டன் யூரியா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கணபதிபாளையம் அருகே, தனியார் கம்பெனியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானிய உரத்தை பயன்படுத்தி, 'பிளைவுட்' பசை தயாரிப்பதாக வருவாய்த்துறைக்கு
 மானிய உரத்தில் சட்ட விரோதமாக பசை தயாரிப்பு: 42 டன் யூரியா பறிமுதல்; கம்பெனிக்கு 'சீல்'

ஆனைமலை:பொள்ளாச்சி அருகே, விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்ட உரத்தை பயன்படுத்தி, பசை தயாரித்த கம்பெனிக்கு வருவாய்த்துறையினர், 'சீல்' வைத்து, 42 டன் யூரியா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கணபதிபாளையம் அருகே, தனியார் கம்பெனியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானிய உரத்தை பயன்படுத்தி, 'பிளைவுட்' பசை தயாரிப்பதாக வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன், ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம், வேளாண் அலுவலர் ஸ்ரீமதி தலைமையிலான அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர்.அங்கு பசை தயாரிக்க, மானிய உரம் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 45 கிலோ எடை கொண்ட, 927 மூட்டைகளில், 41.75 டன் யூரியா உரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 'டி பிக்ஸ்' என்ற அந்த கம்பெனியை பூட்டி 'சீல்' வைத்தனர். அதிகாரிகள் வருவதை அறிந்து, தப்பியோடிய உரிமையாளரை, போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து, கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள உரக்கடைகளில் நேற்று, வேளாண்துறையினர் ஆய்வு செய்தனர்.கேரளாவில் விற்பனைஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம் கூறியதாவது:கணபதிபாளையத்தில், 'எலைட் சால்வென்ட் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் வளாகத்தில், குத்தகை அடிப்படையில், 'டி பிக்ஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கேரளாவைசேர்ந்த, ஆதில் முஸ்தபா. தப்பியோடிய இவர் மீது, ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டுஉள்ளது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து, உரக்கடைக்காரர்கள் உதவியுடன் யூரியா மூட்டைகளை, மானிய விலையில் வாங்கி வந்து, சட்ட விரோதமாக, பிளைவுட் பசை தயாரித்து, அதை கேரளாவில் விற்பனை செய்கிறார்.தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் ஒரு மூட்டை யூரியா உரம், 2,500 ரூபாய்க்கு மேல் சந்தையில் விற்பனையாகிறது. அதுவே, விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் ஒரு மூட்டை யூரியா, 266.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆதில் முஸ்தபா மற்றும் இவருக்கு உதவிய உரக்கடைக்காரர்கள் மீது, வேளாண்துறை மற்றும் போலீசார் உதவியுடன், உரக்கட்டுப்பாட்டு சட்டத்தில், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தாசில்தார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X