சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றோர குடியிருப்புகள் காலி செய்ய நோட்டீஸ்

Added : நவ 20, 2020
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் ஆற்றோர பகுதியில் குடியிருக்கும் மக்களில், முதற்கட்டமாக, 16 குடும்பங்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டதால், மக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 1920க்கு முன்பு ஆறுகள், 60 அடி அகலம் இருந்தன. படிப்படியாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. 2014ம் ஆண்டு, சென்னை ஐகோர்ட், ஆற்றோர ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிட்டது.இதை

குன்னுார்:குன்னுார் ஆற்றோர பகுதியில் குடியிருக்கும் மக்களில், முதற்கட்டமாக, 16 குடும்பங்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டதால், மக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 1920க்கு முன்பு ஆறுகள், 60 அடி அகலம் இருந்தன. படிப்படியாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. 2014ம் ஆண்டு, சென்னை ஐகோர்ட், ஆற்றோர ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., நகர், கன்னி மாரியம்மன் கோவில் தெரு, சித்தி விநாயகர் கோவில் தெரு, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், ஆற்றோர புறம்போக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்காக, கேத்தி அருகே பிரகாசபுரம் பகுதியில் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

சமீபத்தில், நீலகிரி வந்த முதல்வர் பழனிசாமி இவற்றை திறந்து வைத்தார்.முதற்கட்டமாக, எம்.ஜி.ஆர்., நகர் ஆற்றோர பகுதியில் குடியிருக்கும், 87 குடும்பங்களுக்கு நோட்டீஸ் வழங்க பட்டியல் இடப்பட்டு, 22 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இந்நிலையில், ஆற்றோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், நேற்று குன்னுார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாசில்தார் சீனிவாசன் பேச்சு நடத்தினார். இதை தொடர்ந்து, கலெக்டரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்து, மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X