பொது செய்தி

தமிழ்நாடு

சைனிக் பள்ளி மாணவர் சேர்க்கை: டிச., 3 வரை விண்ணப்பிக்கலாம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 2021-22 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம், டிச., 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ராணுவ அமைச்சகத்தின் கீழ், மாநில அரசின் வாயிலாக, உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு, கடந்த மாதம் வெளியிடப்பட்டது.வரும் 2021-22

உடுமலை:உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 2021-22 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம், டிச., 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ராணுவ அமைச்சகத்தின் கீழ், மாநில அரசின் வாயிலாக, உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு, கடந்த மாதம் வெளியிடப்பட்டது.வரும் 2021-22 கல்வியாண்டு முதல், ஆறாம் வகுப்பில் மாணவியரும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். சேர்க்கைக்கான கல்வி தகுதி, வயது, இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், பள்ளி இணைய தள முகவரியான, www.sainikschool amaravathinagar.edu.in என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம். http://aissee.nta.nic.in என்ற இணைப்பில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க, நவ., 19 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, டிச., 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தல், கல்வி உதவித்தொகை, நுழைவுத் தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, பள்ளி இணையதளத்தை பார்வையிடலாம்.இத்தகவலை, பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X