கிளப்புறாங்கய்யா...

Added : நவ 20, 2020
Share
Advertisement
காவலருக்கு சல்யூட்மத்திய பிரதேசம், ஜபூல்பூர் நகரில், மினி வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், பெண்கள் உட்பட 35 தொழிலாளர்கள் காயமடைந்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்த நிலையில் காயம் அடைந்தவர்களை துாக்கி செல்ல ஸ்டிெரச்சர் கிடைக்கவில்லை. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் சென் என்பவர்காயமடைந்த பெண் ஒருவரை தன் முதுகில் சுமந்து சென்று சிகிச்சைக்கு

காவலருக்கு சல்யூட்

மத்திய பிரதேசம், ஜபூல்பூர் நகரில், மினி வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், பெண்கள் உட்பட 35 தொழிலாளர்கள் காயமடைந்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்த நிலையில் காயம் அடைந்தவர்களை துாக்கி செல்ல ஸ்டிெரச்சர் கிடைக்கவில்லை. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் சென் என்பவர்காயமடைந்த பெண் ஒருவரை தன் முதுகில் சுமந்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். காவலரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

குறும்புக்கார நாய்

இளைஞர் ஒருவர் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நாய் மிகவும் குறும்பு செய்வதால், சிறிய கூண்டு ஒன்று வாங்கி வந்து அதில் நாயை அடைத்தார். அப்போதும், அந்த நாய் கூண்டின் கம்பிகளை வாயால் கடித்து உடைத்தது. பின்னர், அதில் இருந்து லாவகமாக வெளியேறி ஏதோ ஜெயித்து விட்டதுபோல், தாவி குதித்தபடி ஓடி விளையாடுகிறது. தற்போது, இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.

யானையை விரட்டிய பூனை

தாய்லாந்தின், நகோன் நாயோக் என்ற பகுதியில், 35 வயதான காட்டு யானை உணவு தேடி ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து, தோட்டத்தில் இருந்த மரம், செடிகளை துவம்சம் செய்தது. அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சிம்பா என பெயரிடப்பட்ட, மூன்று வயதான பூனையை வளர்த்து வருகிறார். இந்நிலையில், யானை வீட்டுக்கு அருகில் வந்ததை கண்ட பூனை சிறிதும் அச்சமின்றி சீற்றத்துடன் அதை எதிர் கொண்டது. இதனால், பயந்து போன யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது. மொபைல்போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் வியப்படைய செய்துள்ளது.

அந்தரத்தில் 'அவதார்'

சீனாவின், ஷாங்ஜியாங்ஜி மாகாணத்தின் மலைப்பகுதியில் உலகிலேயே உயரமான வெளிப்புற 'லிப்ட்' அமைக்கப்பட்டுள்ளது. 1,070 அடி உயரத்துக்கு இந்த லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்குகளுடன் முழுவதும் கண்ணாடியில் செய்யப்பட்டுள்ளது இந்த லிப்ட். கீழிருந்து மேலே செல்ல, 88 விநாடி எடுத்து கொள்கிறது. இந்த லிப்டில் பயணம் செய்யும்போது, அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் மலைகள் அந்தரத்தில் தொங்குவதுபோல் இருப்பதால், 'அவதார்' திரைப்படத்தை நினைவுபடுத்துவதுபோல் உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X