கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்து உள்ளது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில், துாதரக முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டு உள்ளனர். முதல்வரின் முதன்மை செயலராக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை, அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், திருவனந்தபுரம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் பேசியதாக, 'ஆடியோ' ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது. அதில், இந்த வழக்கில், முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறும்படி, அமலாக்கத் துறையினர் நெருக்கடி கொடுப்பதாக, ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.இந்த ஆடியோ எப்படி கசிந்தது என்பது தொடர்பாக, கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த, மத்திய அமைப்புகள் முயற்சிகள் செய்வதாக, ஆளும் தரப்பில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வழக்கை திசை திருப்பும் வகையில், ஆடியோவை வெளியிடப்பட்டுள்ளதாக, அரசுக்கு எதிராக, பா.ஜ., மற்றும் காங்., கட்சிகள் கூறியுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE