பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்

Added : நவ 20, 2020
Share
Advertisement
விருத்தாசலம்; வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான பணிகளை, அந்தந்த ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி அறிவுறுத்தினார்.கடலுார், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு

விருத்தாசலம்; வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான பணிகளை, அந்தந்த ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி அறிவுறுத்தினார்.கடலுார், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விவிபாட்., எனப்படும் ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், விருத்தாசலம் சேமிப்புக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.இதனை, அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், கலெக்டர் சந்திரசேகர சகாமுரி நேற்று ஆய்வு செய்தார். ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பறையில் உள்ள சிசிடிவி., கேமரா பதிவுகளை சரிபார்த்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, 'வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்க, தேவையான இறப்புச் சான்றிதழை அவர்களின் குடும்பத்தினரிடம் பெற்று, பதிவதில் சிக்கல் ஏற்படுகிறது உட்பட பல பிரச்னைகள் குறித்து கட்சியினர் கலெக்டரிடம் முறையிட்டனர்.கட்சி பிரதிநிதிகள் இறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட படிவங்களை பெறும் போது குழப்பம் ஏற்படும். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் விபரங்களை சேகரித்து, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம். அந்த விபரங்களை நிலைய அலுவலர்கள் பதிவேற்றம் செய்து வாக்காளர் பட்டியலில் நீக்குதல், சேர்த்தல் பணிகளை செய்வர்' என்றார்.சப் கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் சிவக்குமார், தேர்தல் துணை தாசில்தார் அன்புராஜ், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், தேர்தல் உதவியாளர் சுரேஷ், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செல்வகுமரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சியில் நடந்து வரும் குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X