பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் கட்டணத்தை திரும்ப பெற விவசாய சங்கம் கோரிக்கை

Added : நவ 20, 2020
Share
Advertisement
பண்ருட்டி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பண்ருட்டி ஒன்றிய குழுக்கூட்டம் நேற்று சங்க அலுவலகத்தில் நடந்தது.ஒன்றிய தலைவர் குமரகுருபரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் தனபால், லோகநாதன், ஒன்றிய பொருளாளர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.அரசு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 வசூலிப்பதை திரும்ப பெற

பண்ருட்டி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பண்ருட்டி ஒன்றிய குழுக்கூட்டம் நேற்று சங்க அலுவலகத்தில் நடந்தது.ஒன்றிய தலைவர் குமரகுருபரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் தனபால், லோகநாதன், ஒன்றிய பொருளாளர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.அரசு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 வசூலிப்பதை திரும்ப பெற வேண்டும்.பூங்குணம், நத்தம் ஏரி மலட்டாறு வாய்க்கால்களை துார்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். முந்திரியை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். எலந்தம்பட்டு, காமாட்சிபேட்டையில் அரசு மணல் குவாரியை திரும்ப பெற வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X