தடுப்பு கட்டை உயரம் குறைவால் வீணாகும் விவசாய நிலங்கள்

Added : நவ 20, 2020
Share
Advertisement
நடுவீரப்பட்டு; சி.என்.பாளையத்தில் கட்டப்பட்ட தடுப்பு கட்டை உயரம் குறைவாக இருப்பதால் நிலங்கள் மீண்டும் வீணாகின்றன.சி.என்.பாளையத்தில் உள்ள கோட்டக்கரை சுற்றி 100 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் சி.என்.பாளையம் திடீர்குப்பம் வழியாக மழைநீர் ஓடி விவசாய நிலங்கள் பாழாகின.விவசாயிகள் கோரிக்கையேற்று ஒன்றிய பொது நிதியில் ரூ. 21 லட்சம் மதிப்பில் தடுப்பு

நடுவீரப்பட்டு; சி.என்.பாளையத்தில் கட்டப்பட்ட தடுப்பு கட்டை உயரம் குறைவாக இருப்பதால் நிலங்கள் மீண்டும் வீணாகின்றன.

சி.என்.பாளையத்தில் உள்ள கோட்டக்கரை சுற்றி 100 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் சி.என்.பாளையம் திடீர்குப்பம் வழியாக மழைநீர் ஓடி விவசாய நிலங்கள் பாழாகின.விவசாயிகள் கோரிக்கையேற்று ஒன்றிய பொது நிதியில் ரூ. 21 லட்சம் மதிப்பில் தடுப்பு கட்டை, ரேம்ப் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தனர். இப்பணிகள் நடக்கும் போது தடுப்புசுவரின் உயரம் மிக குறைவாக உள்ளதால் மீண்டும் மழை நீர் விவசாய நிலத்தில் செல்லும் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதை அதிகாரிகள் கண்டு கொள்ளவிலை.தற்போது பருவ மழையில் அதிகளவு மழைநீர் பெருக்கெடுத்து, தடுப்புக் கட்டையை கடந்து நிலங்களை மீண்டும் வீணாக்கியுள்ளன. ஒன்றிய அதிகாரிகள் அலட்சியத்தால் ரூ. 21 லட்சம் வீணாகியதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இந்த தடுப்பு சுவரை ஆய்வு செய்து, விவசாயநிலத்தில் மழைநீர் செல்லாதவாறு தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X