சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராய வியாபாரிகள் கைது

Added : நவ 20, 2020
Share
Advertisement
கடலுார்; சாராய வியாபாரிகள் இருவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடலுார் முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கடந்த 20ம் தேதி ரோந்து சென்றபோது, வீட்டின் பின்புறம் 120 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த மணக்குப்பம் இளையபெருமாள், 49; என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.அதே போல், 22ம் தேதி சங்கொலிக்குப்பம், புலிக்குத்தி ஓடை அருகே 120 லிட்டர்

கடலுார்; சாராய வியாபாரிகள் இருவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடலுார் முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கடந்த 20ம் தேதி ரோந்து சென்றபோது, வீட்டின் பின்புறம் 120 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த மணக்குப்பம் இளையபெருமாள், 49; என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.அதே போல், 22ம் தேதி சங்கொலிக்குப்பம், புலிக்குத்தி ஓடை அருகே 120 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த கண்ணாரப்பேட்டை ஏரிமேடு பகுதி தினேஷ்வரன், 22; என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர்களின் குற்றச் செயலை தடுக்க, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில், இளையபெருமாள் மற்றும் தினேஷ்வரனை ஓராண்டு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சந்திரசேகர சகாமுரி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை சிறையிலுள்ள இருவரிடமும் போலீசார் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X