தமிழ்நாடு

அலட்சியம்: ஆன் லைன் வகுப்பு கற்பிக்கும் பணிகளில்...பொதுத்தேர்வு எழுதுவோர் பாதிக்கும் சூழல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளில் கல்வி கற்பதில் மாணவ, மாணவிகளும், கண்காணிப்புப் பணியில் ஆசிரியர்களும் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பொதுத் தேர்வு எழுதுவோர் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தியதால் நடப்பு
 அலட்சியம்:   ஆன் லைன் வகுப்பு கற்பிக்கும் பணிகளில்...பொதுத்தேர்வு எழுதுவோர் பாதிக்கும் சூழல்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளில் கல்வி கற்பதில் மாணவ, மாணவிகளும், கண்காணிப்புப் பணியில் ஆசிரியர்களும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதனால் பொதுத் தேர்வு எழுதுவோர் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தியதால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கவில்லை. தனியார் பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் முதல், ஆன் லைன் வகுப்புகளை நடத்துகின்றன. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கு 'கல்வி' தொலைக்காட்சி வாயிலாக கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால், இதனை மாணவர்கள் பின்பற்றுவதிலும், ஆசிரியர்கள் கண்காணிப்பதிலும் சிக்கல் நிலவியது. இதனால் பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வகுப்பு வாரியாக, வாட்ஸ் ஆப் குழு தொடங்கியும், போன் மூலம் பேசியும், யு--டியுப், 'கல்வி' தொலைக்காட்சி வாயிலாகவும் ஆன் லைன் கற்பித்தல் பணியை துவங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் என 4 கல்வி மாவட்டங்களை உள்ளிடக்கிய கடலுார் வருவாய் மாவட்டத்தில் 260க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளில் ஆரம்பத்தில் மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டினர். இந்த ஆர்வம் தற்போது குறைந்து, மாணவ, மாணவிகள் அலட்சியமாக உள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் இருந்தே பள்ளிக்கு வருகின்றனர். பலரது பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் படிக்காதவர்களாக உள்ளனர்.

இதனால், பிள்ளைகள் படிப்பதை கண்காணிக்க முடிவதில்லை. 'ஸ்மார்ட்' போன் வசதி இல்லாததாலும் கல்வி கற்க முடியவில்லை.மேலும் மாணவர்களை கண்காணிப்பதில் ஆசிரியர்களும் தற்போது அலட்சியம் காட்டுவதால் பல பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகள் பெயரளவில் மட்டுமே நடக்கிறது. இதனால், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆன் லைனில் கற்றால் பணியில் ஆர்வம் காட்டினால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை மாணவ, மாணவியர் உணர வேண்டும். இதேப் போன்று, பிள்ளைகள் படிப்பதை கண்காணித்தால் மட்டுமே எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X