பொது செய்தி

தமிழ்நாடு

சின்னவாய்க்கால் முகத்துவாரம் துார்வாரும் பணியை எம்.எல்.ஏ., ஆய்வு

Added : நவ 20, 2020
Share
Advertisement
கிள்ளை,; கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை பொக்லைன் மூலம் ஆழப்படுத்தும் பணியை நேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரம் துார்ந்ததால், சுற்றியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் படகில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியவில்லை. பாதித்த மக்களின் கோரிக்கையேற்று, ரூ. 7 லட்சம் செலவில் சின்னவாய்க்கால் முகத் துவாரத்தை ஆழப்படுத்தி

கிள்ளை,; கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை பொக்லைன் மூலம் ஆழப்படுத்தும் பணியை நேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரம் துார்ந்ததால், சுற்றியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் படகில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியவில்லை. பாதித்த மக்களின் கோரிக்கையேற்று, ரூ. 7 லட்சம் செலவில் சின்னவாய்க்கால் முகத் துவாரத்தை ஆழப்படுத்தி துார்வார பாண்டியன் எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுத்தார்.கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை பொக்லைன் மூலம் ஆழப்படுத்தும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., 10 மீனவ கிராம நிர்வாகிகளுடன், படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அவருடன், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி, முன்னாள் நகர செயலாளர் சுந்தர், நகர செயலாளர் விஜயன், நிர்வாகிகள் தன ஜெயராமன், தமிழரசன், பொன்னுசாமி, கலையரசன், மணிமாறன், சிவராஜன், கிராம தலைவர் தேவநாதன், முன்னாள் கிராம தலைவர் ஜவகர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X