பொது செய்தி

தமிழ்நாடு

பெலாந்துறை அணைக்கட்டில் மணல் மூட்டைகள் தயார்

Added : நவ 20, 2020
Share
Advertisement
பெண்ணாடம்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பெலாந்துறை அணைக்கட்டில் மணல் மூட்டைகள் தயார் படுத்தப்பட்டன.பெண்ணாடம் மற்றும் வெள்ளாற்றங்கரையோரம் சவுந்திரசோழபுரம், செம்பேரி உட்பட பல கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வட கிழக்கு பருவ மழைக்கு வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் கிராமங்களுக்குள் புகுந்து

பெண்ணாடம்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பெலாந்துறை அணைக்கட்டில் மணல் மூட்டைகள் தயார் படுத்தப்பட்டன.பெண்ணாடம் மற்றும் வெள்ளாற்றங்கரையோரம் சவுந்திரசோழபுரம், செம்பேரி உட்பட பல கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வட கிழக்கு பருவ மழைக்கு வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் கிராமங்களுக்குள் புகுந்து குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கும்.பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பொதுப் பணித்துறை சார்பில் அணைக்கட்டில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைப்பது வழக்கம். பருவமழை துவங்கியும் அணைக்கட்டில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கவில்லை.அதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து பருவமழையை எதிர்கொள்ள பெலாந்துறை அணைக்கட்டு வளாகத்தில் புதிதாக மணல் மூட்டைகள் தயார் படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X