பொது செய்தி

தமிழ்நாடு

நெய்வேலியில் இன்று பா.ம.க., முப்படை சந்திப்பு

Added : நவ 20, 2020
Share
Advertisement
நெய்வேலி; நெய்வேலியில் இன்று நடக்கும் பா.ம.க., தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை ஆகிய முப்படையினர் பங்கேற்கும் இணையவழி சந்திப்புக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகிறார்.பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன் அளித்த பேட்டி:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வழிக்காட்டுதலின்படி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், எம்.பி., தமிழகம் முழுதுமுள்ள பா.ம.க.,வினரிடம் இணைய

நெய்வேலி; நெய்வேலியில் இன்று நடக்கும் பா.ம.க., தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை ஆகிய முப்படையினர் பங்கேற்கும் இணையவழி சந்திப்புக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகிறார்.பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன் அளித்த பேட்டி:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வழிக்காட்டுதலின்படி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், எம்.பி., தமிழகம் முழுதுமுள்ள பா.ம.க.,வினரிடம் இணைய வழியில் சந்தித்து கட்சி வளர்ச்சிப் பணிகள், சட்டசபை தேர்தல்களில் செயல்பட வேண்டிய வழிமுறைகள், தொகுதியில் நிலவும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.இன்று நெய்வேலி தொகுதிக்குட்பட்ட முப்படையினர் பங்கேற்கும் இணைய வழிக் கூட்டத்தில் பா.ம.க.,இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகிறார். பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, மாநில வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில இணை பொதுச் செயலாளர் இசக்கி, மாநில சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவப்பிரகாசம், புதுவை மாநில அமைப்பாளர் தன்ராஜ், மாநில அமைப்பு செயலாளர் செல்வக்குமார், ஊடக பேரவை செயலாளர் அருள்,செய்தி தொடர்பாளர் வினோபா ஆகியோர் பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.பா.ம.க.,மாவட்ட செயலாளர் இன்ஜினியர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X