மினி டேங்க்கிலிருந்து வெளியேறும் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
ரிஷிவந்தியம்; சீர்ப்பனந்தலில் மினி டேங்க்கில் இருந்து வெளியேறும் நீர் வீடுகளுக்கு அருகே தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த சீர்ப்பனந்தல் மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மினி டேங்க் அமைக்கப்பட்டது. இந்த டேங்க்கில் இருந்து வீணாகி வெளியேறும் நீர் செல்ல கால்வாய் அமைக்கவில்லை.இதனால் நாள் தோறும்

ரிஷிவந்தியம்; சீர்ப்பனந்தலில் மினி டேங்க்கில் இருந்து வெளியேறும் நீர் வீடுகளுக்கு அருகே தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

ரிஷிவந்தியம் அடுத்த சீர்ப்பனந்தல் மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மினி டேங்க் அமைக்கப்பட்டது. இந்த டேங்க்கில் இருந்து வீணாகி வெளியேறும் நீர் செல்ல கால்வாய் அமைக்கவில்லை.இதனால் நாள் தோறும் மினி டேங்க்கிலிருந்து வெளியேறும் தண்ணீர், குடியிருப்புக்கு அருகிலேயே தேங்கி நின்று சாக்கடையாக மாறியுள்ளது. இதனால், அங்கு கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும், சுற்றிலும் புதர் மண்டியுள்ளதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.மேலும், மினி டேங்க் அருகே உள்ள வீட்டின் சுவர், ஓதம் காத்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் குடியிருப்போர் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மினிடேங்க்கில் இருந்து வெளியேறும் நீர் செல்ல கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X