பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு21, 22 தேதிகளில் சிறப்பு முகாம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் சிறப்பு முகாம் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் கிரண் குராலா செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை 21ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய இரு நாட்களில், காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது.இதனையொட்டி, தங்களது பெயர்களை

கள்ளக்குறிச்சி; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் சிறப்பு முகாம் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் கிரண் குராலா செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை 21ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய இரு நாட்களில், காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது.இதனையொட்டி, தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்குச் சென்று பணியில் இருக்கும் ஓட்டுச்சாவடி நிர்ணய அலுவலரிடம் உரிய படிவத்தை அளிக்கலாம்.படிவம் 6ல் பெயர் சேர்த்தலுக்கு, படிவத்துடன் வயதுக்கான ஆதராமாக ரேஷன் கார்டு நகல், இருப்பிடத்தைக் குறிக்கும் முகவரி உள்ள ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் நகல் இதில் ஏதேனும் ஒரு ஆவணத்துடன் அளிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.மேலும், கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு சமூக இடைவெளியை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கோட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X