தண்டலை சாலையில் முட்புதர் வாகன ஓட்டிகள் அச்சம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; தண்டலை - பெருவங்கூர் சாலையில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் சாலையோர முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி - சூளாங்குறிச்சி சாலையில் தண்டலை, பெருவங்கூர் வழியாக பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். அவ்வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் அதிகளவில் செல்கின்றன.இந்நிலையில், சாலையின் இரு

கள்ளக்குறிச்சி; தண்டலை - பெருவங்கூர் சாலையில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் சாலையோர முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி - சூளாங்குறிச்சி சாலையில் தண்டலை, பெருவங்கூர் வழியாக பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். அவ்வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் அதிகளவில் செல்கின்றன.இந்நிலையில், சாலையின் இரு புறங்களிலும் செடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது. இவை சாலையின் பல இடங்களிலும் உள்ள வளைவான பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி உள்ளன. மேலும், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்க முடியாத நிலை உள்ளது.இதனால் அவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட அனைத்து வாகன ஓட்டிகளும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, சாலையோர முட்செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X