ஜல்லிகள் பெயர்ந்த உலகலப்பாடி சாலை

Added : நவ 20, 2020
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த உலகலப்பாடியில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகலப்பாடியில் தார் சாலை போடுவதாக சில மாதங்களுக்கு முன் சாலையில் உள்ள ஜல்லிகளை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பெயர்த்து எடுத்தனர். இரண்டு மாத காலமாகியும் பெயர்ந்த ஜல்லிகளை

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த உலகலப்பாடியில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகலப்பாடியில் தார் சாலை போடுவதாக சில மாதங்களுக்கு முன் சாலையில் உள்ள ஜல்லிகளை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பெயர்த்து எடுத்தனர். இரண்டு மாத காலமாகியும் பெயர்ந்த ஜல்லிகளை சரிசெய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாலையில் நடக்க சிரமப்படுகின்றனர்.இச்சாலை ஊருக்கு நடுவே உள்ளதால் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகள் வாகனங்களின் டயரில் பட்டு சாலையோரம் உள்ள வீட்டின் ஜன்னல்கள் மீது பட்டு சேதமடைகிறது. மேலும், ஆட்கள் மீது விழும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள உலகலப்பாடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X