பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்கவாடி - அரும்பராம்பட்டு சாலையை சீரமைக்க கோரிக்கை

Added : நவ 20, 2020
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆற்கவாடி - அரும்பராம்பட்டு சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆற்கவாடி - அரும்பராம்பட்டு சாலையில் 2 கி.மீ., தொலைவு சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது. இவர்கள் வெளியூர்

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆற்கவாடி - அரும்பராம்பட்டு சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆற்கவாடி - அரும்பராம்பட்டு சாலையில் 2 கி.மீ., தொலைவு சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது. இவர்கள் வெளியூர் செல்லவேண்டும் என்றால் பைக்குகளில் செல்ல வேண்டும்.இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்கள் இல்லாதவர்கள் அரும்பராம்பட்டு மற்றும் ஈருடையாம்பட்டுக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் பிடித்துச் செல்ல வேண்டும்.சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி ஆற்கவாடி - அரும்பராம்பட்டு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X