குடிநீர் குழாயில் உடைப்புதண்ணீர் வீணாகும் அவலம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
சின்னசேலம்; மேல்நாரியப்பனுார் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது.சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தில் 8,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 6 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. வடக்கு வீதி, மாரியம்மன் கோவில் அருகே உள்ள குடிநீர் தொட்டியிலிருந்து வெளியேறும்

சின்னசேலம்; மேல்நாரியப்பனுார் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது.சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தில் 8,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 6 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. வடக்கு வீதி, மாரியம்மன் கோவில் அருகே உள்ள குடிநீர் தொட்டியிலிருந்து வெளியேறும் குடிநீர் குழாயில் தெற்கு தெருவில் உடைப்பு ஏற்பட்டு, இரண்டு வாரங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும், நீர்த்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்வதில்லை.இது குறித்து பல முறை ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X