பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முகவர்களுக்கானஆலோசனைக் கூட்டம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
ரிஷிவந்தியம்; பகண்டைகூட்ரோட்டில் தி.மு.க., தேர்தல் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பாண்டுரங்கன், பெருமாள், முனியன் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, ரிஷி கன்ஸ்ட்ரக்ஷன் சிவமுருகன், நிர்வாகிகள் ரஞ்சித்,

ரிஷிவந்தியம்; பகண்டைகூட்ரோட்டில் தி.மு.க., தேர்தல் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பாண்டுரங்கன், பெருமாள், முனியன் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, ரிஷி கன்ஸ்ட்ரக்ஷன் சிவமுருகன், நிர்வாகிகள் ரஞ்சித், சரவணன், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், சட்டசபை தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.இதில், தி.மு.க., தேர்தல் முகவர்கள் தங்களது ஊரில் 18 வயது நிரம்பியவர்களை சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பட்டியலை சரி பார்க்க வேண்டும். தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வழங்கினார். தொடர்ந்து வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் படிவம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X