சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேல்மலையனுாரில் மனு கொடுக்கும் போராட்டம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
அவலுார்பேட்டை; மேல்மலையனுாரில் இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.மேல்மலையனுார் பகுதிகளில் விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் 10 மடங்கு இழப்பீடு வழங்கிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மேல்மலையனுார் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மனு கொடுக்கும் போராட்டத்தை

அவலுார்பேட்டை; மேல்மலையனுாரில் இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.மேல்மலையனுார் பகுதிகளில் விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் 10 மடங்கு இழப்பீடு வழங்கிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மேல்மலையனுார் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.வட்ட தலைவர் காண்டீபன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதில் மாநில துணை செயலாளர் சுப்ரமணியன், மாநில குழு மாதவன், மாவட்ட செயலாளர் முருகன், டவர் லைன் போராட்டக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் பலராமன், வட்ட செயலாளர் எழில்ராஜா, சிவன், மா.கம்யூ., வட்ட செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர், பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரி தாசில்தார் நெகருன்னிசாவிடம் மனுக்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X