பொது செய்தி

தமிழ்நாடு

மயிலத்தில் கற்பிக்கும் பயிற்சி

Added : நவ 20, 2020
Share
Advertisement
மயிலம்; மயிலம் வட்டார வள மையம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் மற்றும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் வட்டார அளவிலான கல்வி அறிவு மையம் தன்னார்வலர் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா வட்டார வள மையத்தில் நடந்தது.மயிலம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார

மயிலம்; மயிலம் வட்டார வள மையம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் மற்றும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் வட்டார அளவிலான கல்வி அறிவு மையம் தன்னார்வலர் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா வட்டார வள மையத்தில் நடந்தது.மயிலம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சுமதி,வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேசுகையில் மயிலத்தில் நடைபெறுகின்ற தன்னார்வலர் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.இதில் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேலே உள்ள படிக்காதவர்களை கண்டறிந்து தீவிரமாக கல்வியளித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி கற்பிக்க கிராமத்திற்கு ஒருவர் வீதம் 47 ஊராட்சிகளில் தன்னார்வல ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மயிலம் ஒன்றியத்தில் முதல் கட்டமாக 940 பேர் கற்பித்தல் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த கற்பிக்கும் பயிற்சியை மிக சிறப்பாக தன்னார்வலர்கள் செய்கின்றனர். நமது மாவட்டம் முழுவதும் பணியாற்றும் தன்னார்வலர்களை பாராட்டுவதாக கூறினார்.இதில் வள மைய கருத்தாளர்கள் தலைமையாசிரியர் ஜீவகன், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஸ்ரீதர், தனசேகர் ஆகியோர் கல்வி அறிவு மைய தன்னார்வலர் ஆசிரியர்களுக்கு கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில் , மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முத்தமிழ்செல்வி உட்பட ஆசிரியர் பயிற்றுநர்கள் விஜயலட்சுமி, ரேவதி, சிறப்பு பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். மயிலம் ஒன்றியத்தை சேர்ந்த 47 பேர் பயிற்சி பெற்றனர்.ஆசிரியர் பயிற்றுநர் தீப்பாஞ்சான் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X