குடிநீர் டேங்க் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் டேங்க் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

Added : நவ 20, 2020
Share
திருவெண்ணெய்நல்லுார்; குடிநீர் டேங்க் அமைத்துதரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மழையம்பட்டு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் தெரு அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடிநீர் டேங்க்

திருவெண்ணெய்நல்லுார்; குடிநீர் டேங்க் அமைத்துதரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மழையம்பட்டு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் தெரு அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடிநீர் டேங்க் அமைத்து அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிகட்டை விரிசல் ஏற்பட்டு மேலே வைக்கபட்டிருந்த டேங்க் விழுந்துள்ளது. இதனால் தண்ணீர் சேமித்து வைத்துகொள்ள முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து பல முறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X