விழுப்புரம்; விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்தில், விளையாட்டு பூங்கா திறப்பு விழா நடந்தது.விழுப்புரம் மகளிர் போலீசார் மற்றும் விழுப்புரம் ேஹாஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்க தலைவர் வேல்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜவேல் வரவேற்றார். ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், அன்பு ஜோதி ஆசிரமம் நிறுவனர் ஜூபின்பேபி முன்னிலை வகித்தார்.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விளையாட்டு பூங்காவை திறந்து வைத்து, வட மாநில மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை அவர்களின் இல்லத்துடன் இணைக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். லயன்ஸ் மாவட்ட ஆளுநர் முருகப்பன், மாவட்ட முன்னாள் ஆளுநர் சரவணன் சிறப்புரையாற்றினார்.அப்போது, இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன், தனிப்பிரிவு ஏட்டு சிவசங்கர், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சிவகுமார், வெங்கடேசன், தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.லயன்ஸ் சங்க செயலாளர் கோபி, பொருளாளர் பார்த்திபன் நன்றி கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE