பொது செய்தி

தமிழ்நாடு

குகை ஓவியங்கள்: கலெக்டர் ஆய்வு

Added : நவ 20, 2020
Share
Advertisement
கண்டாச்சிபுரம்; தினமலர் செய்தி எதிரொலியாக கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலை குகை ஓவியங்கள் உள்ள பகுதிகளை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்.கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலை மற்றும் மேல்வாலை ஆகிய இரண்டு கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாறை குகைகளில் பழமையான ஒவியங்கள் உள்ளன.குகை ஓவியம் உள்ள பகுதி தொடர்ந்து பராமரிப்பு இல்லாமலும் அருகில் கல்குவாரி நடப்பதையும்,

கண்டாச்சிபுரம்; தினமலர் செய்தி எதிரொலியாக கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலை குகை ஓவியங்கள் உள்ள பகுதிகளை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்.கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலை மற்றும் மேல்வாலை ஆகிய இரண்டு கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாறை குகைகளில் பழமையான ஒவியங்கள் உள்ளன.குகை ஓவியம் உள்ள பகுதி தொடர்ந்து பராமரிப்பு இல்லாமலும் அருகில் கல்குவாரி நடப்பதையும், தொன்மையான ஒவியங்களை பாதுகாக்கவேண்டும் என தினமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்து தொல்லியல் துறையினர், வருவாய் துறையினர், தொல்லியல் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், குகை ஓவியங்களை பார்வையிட்டனர்.நேற்று மதியம் விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை இந்த பாறை ஓவியங்கள் உள்ள பகுதியை பார்வையிட்டார்.பின்னர் கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், முகையூர் பி.டி.ஓ., சாம்ராஜ் ஆகியோருடன் ஆலோசனை செய்தார். ஓவியங்கள் உள்ள பகுதிக்கு சிறிய அளவிலான சாலை வசதியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.இதில் எஸ்.எஸ்.ஐ ஜோசப்ரவி, முகையூர் ஆர்.ஐ மங்களதேவி, வி.ஏ.ஓ பார்த்தீபன், வட்ட சார் ஆய்வாளர் ராஜாமணி தாலுகா அலுவலக ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X