தமிழ்நாடு

குறைவு: மாவட்டத்தில் சராசரி வடகிழக்கு பருவமழை...இதுவரை மூன்றில் ஒரு பங்கு பெய்துள்ளது

Added : நவ 20, 2020
Share
Advertisement
விழுப்பும்; விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கால தாமதமாக துவங்கியுள்ளதால், இதுவரை 210 மி.மீ., மட்டுமே மழை பதிவாகியுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 47 சதவீதம், அதாவது 3.37 லட்சம் எக்டர் நிகர

விழுப்பும்; விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கால தாமதமாக துவங்கியுள்ளதால், இதுவரை 210 மி.மீ., மட்டுமே மழை பதிவாகியுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 47 சதவீதம், அதாவது 3.37 லட்சம் எக்டர் நிகர சாகுபடி பரப்பாக உள்ளது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில், 75 சதவீதம் மக்கள், விவசாயத்தை சார்ந்துள்ளனர்.மாவட்டத்தில் 91 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர். மாவட்டத்தின் நிலவியல் அமைப்பு மற்றும் பருவநிலையும் வேளாண் தொழிலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.

இதனால், நெல், கரும்பு, வாழை, கருணை கிழங்கு, பயறு வகை மற்றும் சிறுதானிய வகை பயறுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களும் செய்யப்படும் அளவில் மண் வளம் உள்ள ஒரே மாவட்டமாக விழுப்புரம் திகழ்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் வீடூர் அணையை தவிர்த்து பெரிய அளவிலான அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் இல்லை. மாவட்டத்தில் 60 சவீதம் விவசாய நிலங்களில், பருவமழையை நம்பியே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் இயல்பான மழையளவு 1,060 மி.மீ., ஆகும்.இதில், தென்மேற்கு பருவமழை 356.66 மி.மீ., மற்றும் வடகிழக்கு பருவமழை 638 மி.மீ., என ஆண்டின் சராசரி மழை அளவாக உள்ளது. தென்மேற்கு பருவமழை துவங்கும் ஜூலை மாதம் முதல் செப்., மாதம் வரை இந்தாண்டு மாவட்டத்தில் 320.49 மி.மீ., பெய்துள்ளது. இது சராசரி மழை அளவை விட 36.17 மி.மீ., குறைவாக பெய்துள்ளது.இதேபோன்று, வடகிழக்கு பருவமழையானது, அக்., மாதம் துவங்கி டிச., மாதம் வரை பெய்யும். ஆனால், இதுவரை 210.45 மி.மீ., மட்டுமே மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. இதில், அக்., மாதத்தில் 112.82 மி.மீ., மற்றும் நவ., மாதத்தில் இதுவரை 97.63 மி.மீ., பதிவாகியுள்ளது.

ஆனால், கடந்தாண்டு அக்., மாதத்தில் 172.03 மி.மீ., மற்றும் நவ., மாதத்தில் 149.09 மி.மீ., மழை பதிவாகியது.விழுப்புரம் மாவட்டத்தில் அக்., மாதத்தில் கடந்த ஆண்டைவிட 55 மி.மீ., மற்றும் நவ., மாதத்தில் 69 மி.மீ., மழை குறைவாகவே பெய்துள்ளது. மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வடகிழக்கு பருவமழை இதுவரை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையானது, வரும் 40 நாட்களில் 565.12 மி.மீ., பெய்ய வேண்டியுள்ளது.தெற்மேற்கு பருவமழை 36.17 மி.மீ., கைவிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழையானது மீதமுள்ள 565.12 மி.மீ., மாவட்டத்தில் மழை பெய்யுமா என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மாவட்டத்தின் பல இடங்களில் சரிவர பெய்யாததால், விவசாயம் பொய்த்துவிட்டது. வடகிழக்கு பருவமழையிலும், இதே நிலை ஏற்பட்டால் மாவட்டத்தில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்வது கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.நீர்நிலை ஆக்கிரமிப்புவிழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. இதில் 60 சதவீதம் ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும், பல ஏரிகள் சரியான பராமரிப்பின்றி துார்ந்துபோய் காணப்படுகிறது. இதனால், ஏரிகளில் நீர்பிடிப்பு பகுதிகள் குறைந்து, மழை தண்ணீர் தேங்க போதிய இடமின்றி உள்ளது.

இதனால், பருவமழைக்காலங்களில் கிடைக்கும் மழை தண்ணீரானது, ஏரிகளில் தேங்காமல் வெளியேறி, வீணாக கடலில் கலக்கும் நிலை நீடித்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஏரிகளை தவிர்த்து, பல ஏரிகளில் கலிங்கல்கள், மதகுகள் ஆகியவை சேதமடைந்து உள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவற்றை துார்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X