வாயை பிளந்த மேம்பாலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள் அச்சம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி; ரயில்வே மேம்பாலத்தில், ஏற்பட்டுள்ள பள்ளத் தால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.கும்மிடிப்பூண்டி, கன்னியம்மன் கோவில், ரயில்வே மேம்பாலத்தை, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.இரு ஆண்டுகளுக்கு முன், அந்த மேம்பாலத்தின் நடுவே பள்ளம் ஏற்பட்டது. அதை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர்.தற்போது, அதே இடத்தில், மீண்டும் விரிசல்

கும்மிடிப்பூண்டி; ரயில்வே மேம்பாலத்தில், ஏற்பட்டுள்ள பள்ளத் தால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.கும்மிடிப்பூண்டி, கன்னியம்மன் கோவில், ரயில்வே மேம்பாலத்தை, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.இரு ஆண்டுகளுக்கு முன், அந்த மேம்பாலத்தின் நடுவே பள்ளம் ஏற்பட்டது. அதை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர்.தற்போது, அதே இடத்தில், மீண்டும் விரிசல் ஏற்பட்டது. அந்த விரிசல், தற்போது, பெரிய பள்ளமாக மாறியுள்ளது. இதனால், அவ்வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் ஒருவித பயத்துடன் கடந்து செல்ல வேண்டிஉள்ளது.இரவு நேரத்தில், பள்ளம் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறி விழ நேரிடுகிறது. வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் அந்த மேம்பால பள்ளத்தை, நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X