பொது செய்தி

தமிழ்நாடு

பொன்னேரியில் நிரம்பிய 36 ஏரிகள் நிரம்பி உள்ளன

Added : நவ 20, 2020
Share
Advertisement
பொன்னேரி; தொடர் மழையால், பொன்னேரி கோட்ட பகுதியில் உள்ள, 254 ஏரிகளில், 36 முழுமையாக நிரம்பி, மற்றவைகளும் அடுத்த சில தினங்களில் நிரம்பும் நிலையில் உள்ளன.பொன்னேரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில், 254 ஏரிகள் உள்ளன. சில தினங்களாக பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பொழிவு இருந்து வருகிறது.மேலும், ஆரணி ஆற்றில் நீர்வரத்து இருப்பதால், லட்சுமிபுரம்

பொன்னேரி; தொடர் மழையால், பொன்னேரி கோட்ட பகுதியில் உள்ள, 254 ஏரிகளில், 36 முழுமையாக நிரம்பி, மற்றவைகளும் அடுத்த சில தினங்களில் நிரம்பும் நிலையில் உள்ளன.

பொன்னேரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில், 254 ஏரிகள் உள்ளன. சில தினங்களாக பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பொழிவு இருந்து வருகிறது.மேலும், ஆரணி ஆற்றில் நீர்வரத்து இருப்பதால், லட்சுமிபுரம் அணைக்கட்டில் உள்ள ஷெட்டர்கள் திறக்கப்பட்டு, தண்ணீர் ஏரிகளுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெறுகின்றன.இதன் மூலம், பெரும்பேடு, காட்டூர், தத்தமஞ்சி உள்ளிட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதுவரை, 36 ஏரிகள் முழுமையாகவும், 120ல், 75 சதவீதமும் நிரம்பி உள்ளன. மற்ற ஏரிகளுக்கும் நீர்வரத்து இருக்கிறது.மழைபொழிவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், சில தினங்களில், அனைத்து ஏரிகளிலும், மழைநீர் முழு கொள்ளளவை எட்டும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X