பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரினால் ஏரிகளில் நீர் நிரம்பல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
கடம்பத்துார்; 'ஆக்கிரமிப்புகளை அகற்றி துார் வாரினால், ஏரிகளில், 100 சதவீதம் மழை நீர் நிரம்பும்' என, கடம்பத்துார் ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.கடம்பத்துார் ஒன்றியத்தில், 95 ஏரிகள், 344 குளங்கள், என, மொத்தம், 439 நீர் நிலைகள் உள்ளன. இதில், சில தினங்களாக பெய்த மழையில், பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள எட்டேரி மற்றும் விடையூர், கல்லம்பேடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள இரு குளங்கள் என,

கடம்பத்துார்; 'ஆக்கிரமிப்புகளை அகற்றி துார் வாரினால், ஏரிகளில், 100 சதவீதம் மழை நீர் நிரம்பும்' என, கடம்பத்துார் ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.கடம்பத்துார் ஒன்றியத்தில், 95 ஏரிகள், 344 குளங்கள், என, மொத்தம், 439 நீர் நிலைகள் உள்ளன. இதில், சில தினங்களாக பெய்த மழையில், பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள எட்டேரி மற்றும் விடையூர், கல்லம்பேடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள இரு குளங்கள் என, மூன்று நீர்நிலைகள், 100 சதவீதம் நிரம்பியுள்ளன.மேலும், 95 ஏரிகளில், ஆறு ஏரிகள், 75 சதவீதமும்; 34 ஏரிகள், 50 சதவீதமும்; 49 ஏரிகள், 25 சதவீதமும்; ஐந்து ஏரிகள், 10 சதவீதமும், நிரம்பி உள்ளன.இதேபோல், 344 குளங்களில், 58 குளங்கள், 75 சதவீதமும்; 119 குளங்கள், 50 சதவீதமும்; 164 ஏரிகள், 25 சதவீதமும்; ஒரு குளம், 10 சதவீதம், என, 344 குளங்களும் நிரம்பியுள்ளன.ஏரி மற்றும் குளங்களுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக துார்வாரும் பணியை நிறைவேற்றினால், அனைத்து ஏரி, குளங்களும், 100 சதவீதம் மழைநீர் நிரம்பும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, ஒன்றிய நிர்வாகத்தினர், ஏரி, குளங்களுக்கு வரும், நீர் வரத்து கால்வாய்களை, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X