பொது செய்தி

தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி நுாலக விரிவாக்கம் இடம் கையகப்படுத்தியது அரசு

Added : நவ 20, 2020
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி நகரின் மத்தியில், ஒன்றரை சென்ட் இடத்தில், 50 ஆண்டு காலமாக தாலுகா நுாலகம் இயங்கி வருகிறது.சுமார், 54 ஆயிரம் புத்தகங்கள், 10 ஆயிரம் வாசகர்கள் கொண்டுள்ள அந்த நுாலகம், பாழடைந்த கட்டடத்தில், குறுகிய இடத்தில், படுமோசமான சூழலில் இயங்கி வருகிறது.அந்த நுாலகமும், அதை சுற்றியுள்ள இடமும், சத்திரம் புறம்போக்கு நிலம் என்பதால், நுாலகம் விரிவாக்கம்

கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி நகரின் மத்தியில், ஒன்றரை சென்ட் இடத்தில், 50 ஆண்டு காலமாக தாலுகா நுாலகம் இயங்கி வருகிறது.

சுமார், 54 ஆயிரம் புத்தகங்கள், 10 ஆயிரம் வாசகர்கள் கொண்டுள்ள அந்த நுாலகம், பாழடைந்த கட்டடத்தில், குறுகிய இடத்தில், படுமோசமான சூழலில் இயங்கி வருகிறது.அந்த நுாலகமும், அதை சுற்றியுள்ள இடமும், சத்திரம் புறம்போக்கு நிலம் என்பதால், நுாலகம் விரிவாக்கம் செய்ய போதிய இடம் ஒதுக்கி தரும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாவட்ட நுாலகர் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.போதிய இடம் ஒதுக்கி தர வேண்டும் என, சில ஆண்டுகளுக்கு முன், கலெக்டருக்கு, நீதிமன்றம் அறிவுறுத்தியது. நுாலக விரிவாக்கத்திற்காக ஒதுக்கிய இடத்தில், தனியார் கட்டடம் இருந்ததால், நிதிமன்ற உத்தரவை எதிர்த்து, தனியார் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.தனியார் தொடுத்த அனைத்து வழக்குகளும், தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் பாதுகாப்புடன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கதிர்வேல் தலைமையிலான, வருவாய் துறையினர், நேற்று, இடம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.நுாலகத்தின் பின்புறத்தில் உள்ள இரு கட்டடங்களின் முகப்பு பகுதியை, ஜே.சி.பி., மூலம் இடித்து, ஒன்றரை சென்ட் இடத்தை அரசு கையகப்படுத்தினர்.அதன் மூலம், தற்போது உள்ள ஆறு சென்ட் இடத்தில், புதிய நுாலகத்திற்கான கட்டடம் நிறுவ இருப்பதாக, நுாலக அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X