பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Added : நவ 20, 2020
Share
Advertisement
ஊத்துக்கோட்டை: வாக்காளர் குறித்த விழிப்புணர்வு பேரணியில், வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள், துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.நாட்டில், 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாக சேர்க்க, இந்திய தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊத்துக்கோட்டை வருவாய்த் துறை சார்பில், வாக்காளர்

ஊத்துக்கோட்டை: வாக்காளர் குறித்த விழிப்புணர்வு பேரணியில், வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள், துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.நாட்டில், 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாக சேர்க்க, இந்திய தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊத்துக்கோட்டை வருவாய்த் துறை சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை, தாசில்தார் தேவி கொடி அசைத்து துவக்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் ராமேஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.பேரணி, தாலுகா அலுவலகத்தில் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, பஸ் நிலையத்தை அடைந்தது.இடையே, 18 வயது நிரம்பியவர்கள், தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள, வரும், 21, 22, 28, 29 ஆகிய தேதிகள், அடுத்த மாதம், 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.இதில், புதிதாக பதிவு செய்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X