மகளிர் சக்தி விருதுதிருவள்ளூர்: மத்திய அரசின், மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் மூலம், மகளிர் சக்தி விருதுக்கு, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.மகளிருக்கான சுகாதாரம், சட்ட உதவி, விழிப்புணர்வு என, பெண்களுக்கு சேவை புரிந்தோர் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் பொருட்டு, மகளிர் சக்தி விருது வழங்கப்படும்.தனிப்பட்ட நபர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்; நிறுவனம் என்றால், இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.இவ்விருதுகளை பெற, திருவள்ளுர் மாவட்டத்தை சார்ந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.narishaktiapuraskar.wcd.gov.in இணையதளம் வழியாக, வரும், 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, கலெக்டர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.விண்ணப்பம் வரவேற்புதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதி மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில், காலியாக உள்ள, 11 சமையலர் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடமிருந்து, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 18 - 35 வயது வரை உள்ளோர், திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ, வரும், 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE