மாமல்லபுரம்: உலக பாரம்பரிய வாரம், நவ., 19 - 25ல் கடைபிடிக்கப்படும் நிலையில், மாமல்லபுரத்தில், விழா தவிர்க்கப்பட்டு உள்ளது.
உலக நாடுகளில், தொல்லியல் சின்னங்கள், ஏராளம் உள்ளன. ஒவ்வொரு நாட்டின், பழங்கால கலை, கலாசார, நாகரிக நடைமுறைகளை, இவையே உணர்த்துகின்றன.இளைய தலைமுறையினர், இவற்றை அறியவும், முக்கியத்துவம் உணரவும், வருங்கால தலைமுறைக்காக பாதுகாக்கவும், ஏப்., 18ல், உலக பாரம்பரிய நாள்; நவ., 19 - 25ல், உலக பாரம்பரிய வாரம் என, கடைப்பிடிக்கப்படுகிறது.இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளான, நவ., 19ல், உலக பாரம்பரிய வாரம் துவங்கி, ஒருவாரம் கொண்டாடப்படும். பல்லவர் தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ள மாமல்லபுரத்தில், ஆண்டுதோறும், புகைப்பட கண்காட்சி, மாணவர் விழிப்புணர்வு போட்டிகள் என, பாரம்பரிய வார விழா நடத்தப்படும்.தற்போது, சுற்றுலா தடையால், தொல்லியல் சின்னங்கள் திறக்கப்படாத நிலையில், இங்கு விழா தவிர்க்கப்பட்டுள்ளதாக, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE