பொது செய்தி

தமிழ்நாடு

வெயில், மழையில் நனைந்து வீணாகும் ஏகாம்பரநாதர் தேர்

Added : நவ 20, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம்; ஏகாம்பரநாதர் கோவில் தங்கத் தேர், வெயில், மழையில் நனைந்து வீணாகி வருகிறது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பஞ்ச பூத தலங்களில், முதன்மைத் தலமான பிருத்வி, அதாவது மண் தலமாகக் கருதப்படுகிறது. 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக இருந்து வரும் இக்கோவிலுக்கு, மரத்தேர் மற்றும் வெள்ளித் தேர் உள்ளன.தங்கத்தேர் இல்லாத குறையை போக்க, 2014ல், தங்கத் தேருக்கான பணியை,

காஞ்சிபுரம்; ஏகாம்பரநாதர் கோவில் தங்கத் தேர், வெயில், மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பஞ்ச பூத தலங்களில், முதன்மைத் தலமான பிருத்வி, அதாவது மண் தலமாகக் கருதப்படுகிறது. 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக இருந்து வரும் இக்கோவிலுக்கு, மரத்தேர் மற்றும் வெள்ளித் தேர் உள்ளன.தங்கத்தேர் இல்லாத குறையை போக்க, 2014ல், தங்கத் தேருக்கான பணியை, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் செய்ய திட்டமிட்டு, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதை துவக்கி வைத்தார்.இந்தத் தேருக்கு, 32 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி, 1,500 கிலோ செப்புத் தகடு என, மொத்தம், 12 கோடி ரூபாய் மதிப்பில் தேர் அமைப்பு பணிகள் நடந்து வந்தன.தேருக்கான மர வேலைகள் முடிந்து, ஆக., 2015ல், அதன் வெள்ளோட்டம் நடந்தது. பின், செப்புத்தகடு செய்யும் பணி நடந்து முடிந்தது. ஆனால் போதிய தங்கம் இல்லாத காரணத்தால், தங்கத் தேருக்கான பணிகள் அப்படியே முடங்கின.பணி முடங்கியதால், கோவில் அருகே, தங்கத் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. தேருக்கு, சில ஆண்டுகளுக்கு முன் கூரை இருந்தது. இதனால், வெயில், மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருந்தது.ஆனால், சமீப காலமாக தங்க தேருக்கு எந்த கூரையும் இல்லாததால், வெயில், மழையில் நனைந்து நாசமாகி வருகிறது என, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X