குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூடியே கிடக்கும் அவலம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
உத்திரமேரூர்; ஓராண்டாக மூடியே கிடக்கும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, சோமநாத புரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் பேரூராட்சி, சோமநாதபுரத்தில், தனியார் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்ட, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 2018, ஜூனில், பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.இங்கு, 20

உத்திரமேரூர்; ஓராண்டாக மூடியே கிடக்கும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, சோமநாத புரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் பேரூராட்சி, சோமநாதபுரத்தில், தனியார் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்ட, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 2018, ஜூனில், பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.இங்கு, 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 5 ரூபாய்க்கு வழங்கப்பட்டதால், கல்லமா நகர், மல்லிகாபுரம், ஆணைப்பள்ளம், சோமநாதபுரம், காக்கநல்லுார் என, ஐந்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வந்தனர்.இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கும் குடிநீரைவிட, வீணாகும் நீர் அதிகமாக இருப்பதாக கூறி, சுத்திகரிப்பு நிலையத்தை, பேரூராட்சி மூடியுள்ளது. நிலையம் மூடப்பட்டு ஓராண்டாகியும், மீண்டும் திறக்கப்பட்டதால், குறைந்த விலையில் குடிநீர் கிடைக்காமல், அதிகம் காசு கொடுத்து, கேன் குடிநீர் வாங்கும் நிலை உள்ளது.எனவே, சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து, பயன்பாட்டிற்கு விட, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X